மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர் மற்றும் ஒகேனக்கல் - பென்னாகரம் - தருமபுரி - திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை ஆகிய முக்கிய அறிவிப்புகள் இன்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி ஒகேனக்கல் - பென்னாகரம் - தருமபுரி - திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தப்படுமா?" என கேள்வி கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன் வனத்துறை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் தடையில்லா சான்று பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் தடையில்லா சான்று பெற்றதும் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறும். அவசியம் என்றால் வனங்களில் சாலை அமைக்க தேவையான பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து பேசி இதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் ஸ்டான்லி நீர்தேக்கதொட்டி பகுதியில் பாலத்திற்கு ரூ. 2 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என்றும், நீர் தேக்கம் பகுதியில் கட்டப்படும் பாலம் என்பதால் பெரும் தொகை தேவைப்படுகிறது என்றும், திட்ட அறிக்கை தயார் செய்ததும் பணிகள் தொடங்கும் என்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி உறுப்பினர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
அதேபோல் மற்றுத்திறனாளிகளுக்ககு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுமா ? என உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கேள்வி
எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த 2009-10 முதல், இரு கால்களும் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
2024ம் ஆண்டு முதல் ஒருகால் பாதித்து, கைகள் நன்றாக இருக்கும் 18-65 வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது" என அரசின் சார்பில் பதிலளிக்கப்பட்டது.