கர்நாடக மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இதுகுறித்து கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு கொரொனா பரவியது. இந்த ஆண்டு ஓரளவு கொரொனா தாக்கம் குறைந்த நிலையில், தற்போது, மீண்டும் சீனா, அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகளில் பரவி வருகிறது.
சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸான பிஎஃப்-7 ஒமைக்கான் பரவலாம் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் அண்டை நாடான இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி, பொதுஇடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.
இதை ஒவ்வொரு மாநில அரசுகளும் செயல்படுத்தி, வரும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் முக்கசசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநில முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
அதன்படி, திரையரங்கம், கல்வி நிறுவனம், வணிக வளாகங்கள், ஆகிய இடங்களில் முக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் , உணவகங்கள், நட்சத்திர விடுதிகளில், புத்தாண்டுகொண்டாட்டத்தின் போது முக்கவசம் கட்டாயம் எனவும், புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவு 1 ம
ணியுடன் நிறுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.