இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, தி.மு.க.வின் முப்பெரும் விழா குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
"தி.மு.க.வின் முப்பெரும் விழா சாராயம் விற்ற பணத்தில் நடத்தப்பட்டது" என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார். இது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியை உத்தமர் போல முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டுவதையும் அண்ணாமலை விமர்சித்தார். "செந்தில் பாலாஜியை முன்பு திருடன் என்று அவரே விமர்சித்துவிட்டு, இப்போது அவருக்கு பாராட்டு தெரிவிக்கிறார்" என்று அண்ணாமலை கூறினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் மண் குதிரையை நம்பி காவிரி நோக்கி பயணிக்கிறார். 2026 தேர்தலுக்குள் அந்த மண் குதிரை காவிரி கரையில் காணாமல் போய்விடும்" என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்த கடுமையான விமர்சனங்கள் தி.மு.க. தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.