டெல்லியில் அமித்ஷா - எடப்பாடி பழனிசாமி இடையேயான சந்திப்பு திமுகவை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன் “நாட்டின் துணை ஜனாதிபதியாக ஒரு தமிழர் தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை. திமுக ஒரு தமிழருக்கு எந்த ஆதரவையும் வழங்காததை வரலாறு மன்னிக்காது. திமுக எத்தனை கூட்டங்கள் போட்டாலும் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தது திமுகவிற்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜக அடக்குமுறை செய்வதாக தேவையற்றக் குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். உங்கள் அமைச்சரவையை முதலில் கவனியுங்கள். செந்தில் பாலாஜி எத்தனை நாட்கள் வெளியே இருக்கப் போகிறார் என பார்ப்போம். திமுக முப்பெரும் விழாவில் மக்கள் நலன் சார்ந்து எதையுமே பேசவில்லை” என்று கூறியுள்ளார்.
Edit by Prasanth.K