நீட் விலக்கு உள்பட ஆளுநர் திருப்பி அனுப்பிய கோப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து அதற்கு பதிலாக புதிய மசோதா இயற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது
இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்டது ஏன் என்பது குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்
மேலும் நரிக்குறவர் மக்களுக்கு பதவி அளித்து அழகு பார்ப்பது பாஜக மட்டும் தான் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்