Publish Date: Sat, 29 Oct 2022 (14:22 IST)
Updated Date: Sat, 29 Oct 2022 (14:23 IST)
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை குரங்கு என்று கூறியதாக கூறப்பட்டதை அடுத்து பத்திரிகையாளர்கள் சார்பில் மிகப்பெரிய கண்டனங்கள் குவிந்து வருகின்றன
அதுமட்டுமின்றி திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்பட ஒருசில கட்சியினரும் பத்திரிக்கையாளரை தமிழக பாஜக தலைவர் அவமதித்து விட்டதாக கூறி வருகின்றன. ஒருசில போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் இதுகுறித்து நடந்தன என்பதும் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் அண்ணாமலை இது குறித்து விளக்கம் அளித்து உள்ளார் அவர் அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: குரங்கு என்று சொன்னதாக சொல்கிறார்கள். இது புதுவிதமாக இருக்கிறது. நான் கற்றுக் கொண்ட தமிழிலே அப்படி இல்லை. ஏன் புலியைப் போல பாய்கிறீர்கள், விலங்கை போல தாவித் தாவி வருகிறீர்கள் என்ற அர்த்தத்திலே சொன்னேன் என்று கூறினார்.
Mahendran
Publish Date: Sat, 29 Oct 2022 (14:22 IST)
Updated Date: Sat, 29 Oct 2022 (14:23 IST)