Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக முதல்வர் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரை- அண்ணாமலை வரவேற்பு

Advertiesment
தமிழக முதல்வர் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரை- அண்ணாமலை வரவேற்பு
, புதன், 26 அக்டோபர் 2022 (22:12 IST)
கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட  முதல்வர்    ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ள  நிலையில் இதற்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்ததால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து இதுகுறித்து 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பாஜக மற்றும் அதிமுக கடும் விமர்சனம் செய்து வரும் நிலையில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் இருப்பது யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கோவை, உக்கடம் பகுதியில் நிகழ்ந்த கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பானவழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிட பரிந்துரை செய்தவதாக அறிவித்தார்.

இதுகுறித்த பாஜக அண்ணாமலை தன் டுவிட்டர் பக்கத்தில், கோவை தற்கொலைப் படை தாக்குதலின் விசாரணையை தமிழக முதல்வர் தேசிய புலனாய்வு முகமைக்குப் பரிந்துரைத்ததை  @BJP4TamilNadu  வரவேற்கிறது.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க சில ஆலோசனைகளை உங்களுக்கு வழங்க கடமைப்பட்டுள்ளோம்.    3) திமுகவினர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு காவல்துறையினரை பயன்படுத்தாமல், தமிழக காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள்.

நீங்கள் பதவி ஏற்கும் போது அனைத்து தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று அரசை நடத்துவீர்கள் என்ற உறுதிமொழியை அளித்தீர்கள்  மேல் குறிப்பிட்ட ஆலோசனைகளை நீங்கள் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நம்புகிறோம்.

தேசத்தின் நன்மையை கருத்தில் கொண்டு நீங்கள் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் @BJP4TamilNadu  உறுதுணையாக இருக்கும்.’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலிக்க மறுத்த தோழியை வெட்டிக் கொன்ற நபர் கைது!