அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தனது மகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை கொடுத்ததாக திடீரென எழுந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் மீதான குற்றச்சாட்டை விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவினர் தற்போது விசாரணையை தொடங்கி உள்ளனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் விசாரணை வளையத்தில் இருக்கும் சுரப்பாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்பட பல அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பவை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த முறையான அறிவிப்பு எந்த நேரமும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
ஏற்கனவே தேர்வுகள் இன்று பொறியியல் கல்லூரி மாணவர்களை தேர்ச்சி செய்த தமிழக அரசை சர்ச்சைக்குரிய வகையில் சூரப்பா விமர்சனம் செய்திருந்தார் என்பது தெரிந்ததே