அண்ணா பல்கலைகழகத்தை தரம் உயர்த்த கோரிய விவகாரத்தில் தமிழக அரசு தனது முடிவை தெரிவித்துள்ள நிலையில் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைகழகத்தை தரம் உயர்த்துவது குறித்து பல்கலைகழக துணை வேந்தர் சூரப்பா தன்னிச்சையாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. சூரப்பாவின் இந்த செயலுக்கு திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து போராட்டங்கள் நடத்திய நிலையில், அண்ணா பல்கலைகழகத்தை தரம் உயர்த்துவது குறித்து தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறியுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி “ஏழை மாணவர்களின் கல்வி என்பதற்காக கல்வி தரத்தை உயர்த்தாமல் இருக்க முடியுமா? அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால் பல்கலைகழக நிர்வாகத்தில் மாநில அரசு தலையிட முடியாது. கல்வியில் இலக்குகளை அடைய புதிய கல்வி கொள்கை தேவை” என்று கூறியுள்ளார். தமிழக அரசு தனது நிலைபாட்டை அறிவித்த பின்னரும் துணை வேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.