அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி மகளுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் பணிபுரிய வேலை ஒன்று கொடுத்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு விசாரணை செய்ய உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா அந்த பதவியில் நீடிக்கக் கூடாது என்றும் அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் சூரப்பா தொடர்ந்து பதவியில் நீடித்து வருவது விசாரணைக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் கூறியுள்ளார். இதனை அடுத்து சூரப்பா துணைவேந்தர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
இந்த நிலையில்தான் முறைகேடாக தனது பதவியை பயன்படுத்தவில்லை என்றும் தனது மகள் சம்பளம் இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேவை மட்டுமே செய்தார் என்றும் சூரப்பா தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது