Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஞ்சப்பர் ஹோட்டல் முன் தீக்குளித்த பணியாளர் – மருத்துவமணையில் உயிரிழப்பு

Advertiesment
அஞ்சப்பர் ஹோட்டல் முன் தீக்குளித்த பணியாளர் – மருத்துவமணையில் உயிரிழப்பு
, சனி, 6 ஜூலை 2019 (14:24 IST)
சென்னை தி நகரில் உள்ள் அஞ்சப்பர் ஹோட்டல் முன்பு நேற்றிரவு அந்த ஹோட்டலின் பணியாளர் ஒருவர் திக்குளித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சென்னையில் உள்ள பிரபலமான அசைவ உணவகங்களில் அஞ்சப்பரும் ஒன்று. சென்னை மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் இதற்குக் கிளைகள் உள்ளன. பாண்டி பஜாரில் உள்ள அஞ்சப்பர் உணவகத்தில் தர்மபுரியைச் சேர்ந்த 25 வயதான உதய சங்கர் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.  

இதனால் அதிருப்தியடைந்த உதயசங்கர் இரவு பாண்டி பஜாரில் உள்ள அஞ்சப்பர் ஹோட்டல் முன்பு திடீரென தீக்குளித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கடை ஊழியர்களும் பொதுமக்களும் அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் அவர் இன்று சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன் கொடுத்த வாக்குமூலத்தில் ‘என் நண்பன் அஜித் கூடுவாஞ்சேரி கிளையில் வேலை செய்தேன். அங்கே அவன் பணத்தைத் திருடிவிட்டு ஓடியதால் என்னை அடித்து மிரட்டி எனக்கு 2 மாதங்களாக சம்பளம் தரவில்லை. இதனால் நான் பெட்ரோல் ஊற்றி என்னைக் கொளுத்திக் கொண்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பதவியை தூக்கி எறிந்துவிட்டு, சினிமா பார்த்த ராகுல் காந்தி!!