காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை தூக்கியெறிந்த ராகுல் காந்தி, அன்று இரவே சினிமா பார்க்கச் சென்றார்.
சில நாட்களாகவே காங்கிரஸ் கட்சியின் தோல்வியால் துவண்டு போனார் ராகுல் காந்தி. அதனால் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருந்தார். அதன் படி இரு நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து பதவியை ராஜினாமா செய்த அன்று டெல்லியிலுள்ள பி.வி.ஆர். மல்டிபிளக்ஸ் திரையரங்கில் மக்களோடு மக்களாகச் அமர்ந்து ஆர்ட்டிகள் 15 திரைப்படத்தை பார்த்தார்.
தான் முன்னாள் பிரதமரின் மகன் என்றும், ஒரு பெரிய அரசியல்கட்சியின் தலைவராகவும் இருந்தவர் என்ற துளி கூட ’பந்தா’ இல்லாமல் ரசிகர்களோடு ரசிகராய் திரைப்படத்தைப் பார்த்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.