Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

15 % வருகை.... 0 கேள்வி -நாடாளுமன்றத்தில் என்ன செய்கிறார் அன்புமணி ராமதாஸ் ?

Advertiesment
15 % வருகை.... 0 கேள்வி -நாடாளுமன்றத்தில் என்ன செய்கிறார் அன்புமணி ராமதாஸ் ?
, வியாழன், 26 டிசம்பர் 2019 (08:43 IST)
மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பாமகவின் அன்புமணி ராமதாஸின் செயல்பாடுகள் மிகவும் கவலையளிக்கும் விதமாக உள்ளன.

பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸ் மக்களவைத் தேர்தலில் தோற்றதை அடுத்து மாநிலங்களவை உறுப்பினராக அதிமுக கூட்டணியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இருமுறை நாடாளுமன்ற அவைகள் கூடியுள்ளது. இதில் அவர் 15 சதவீதத்துக்கும் குறைவான நாட்கள் மட்டுவே அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளார்.

இரு விவாதங்களில் கலந்து கொண்ட அவர், எவ்வித கேள்வியும் எழுப்பவில்லை. மேலும் எந்த ஒரு தனி நபர் மசோதாவையும் அவர் கொண்டு வரவில்லை.  கலந்துகொண்ட நாட்களிலும் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். அதேநேரத்தில் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ள அதிமுகவைச் சேர்ந்த ஓ பி இரவீந்திரநாத் 79% நாட்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்துள்ளார். அதேபோல 42 விவாதங்களில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெரிய தொடங்கியது சூரிய கிரகணம்..