Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு காண்டிராக்டர்களை கைக்குள் போட்ட சசிகலா: ஐடி பகீர் தகவல்!

அரசு காண்டிராக்டர்களை கைக்குள் போட்ட சசிகலா: ஐடி பகீர் தகவல்!
, செவ்வாய், 24 டிசம்பர் 2019 (15:32 IST)
பண மதிப்பிழப்பின் போது ரூபாய் நோட்டுகளை மாற்ற அரசு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.237 கோடியை சசிகலா கடனாக கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் சசிகலா. இந்நிலையில் அவர் வாங்கி குவித்த சொத்துக்கள் குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
அதன்படி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா பல்வேறு சொத்துகள் வாங்கிள்ள தகவல் முன்னரே வெளியானது. தற்போது இதனைத்தொடர்ந்து மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
webdunia
ஆம், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.237 கோடியை சசிகலா கடனாக கொடுத்ததாக தகவல் ஒன்று வருமான வரித்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
அரசு கட்டடங்கள், அரசு உதவி பெறும் பள்ளி கட்டடங்கள் மற்றும் அரசு டெண்டர் எடுத்த காண்டிராக்டர்களுக்கு ரூ.240 கோடி கடனாக கொடுக்க பேரம் பேசப்பட்டு, அதில் ரூ.237 கோடியை செல்லாத ரூபாய் நோட்டுகளாக கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த பணத்திற்கு ரூ.7.5 கோடி கமிஷனாக பெறப்பட்டது. பணத்தை ஒரு வருடத்திற்குள் திருப்பி தர வேண்டும் அப்படி இல்லையென்றால் 6% வட்டி வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கடன் வழங்கப்பட்டுள்ளது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

”பாகிஸ்தானில் ஏன் இந்து ஜனாதிபதியாக இருந்ததில்லை??”.. ஹெச்.ராஜா கேள்வி