தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. 2026 தேர்தல் குறித்து ஆலோசனையா?

Mahendran
திங்கள், 17 பிப்ரவரி 2025 (13:59 IST)
உள்துறை அமைச்சர் அமித்ஷா பிப்ரவரி 25ஆம் தேதி தமிழகத்திற்கு வருகிறார் என்றும் கோவையில் உள்ள பாஜக அலுவலகத்தை திறந்து வைத்து, அதன் பின்னர் 2026 ஆம் ஆண்டு தேர்தலை குறித்து ஆலோசனை செய்ய உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
கோவையில் புதிய பாஜக அலுவலகம் கட்டப்பட்டுள்ள நிலையில், இந்த கட்டிடத்தை திறந்து வைப்பதற்காக அவர் பிப்ரவரி 26ஆம் தேதி வருகிறார். 26ஆம் தேதி அவர் பாஜக அலுவலகத்தை திறந்து வைக்க இருப்பதாகவும், அதன் பின்னர் ஈஷா யோகா மையத்தில் நடைபெற இருக்கும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
அமித்ஷா பங்கேற்கும் கூட்டங்களில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பிறகு, அவர் 2026 சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை செய்ய இருப்பதாகவும், கூட்டணி குறித்து முக்கியமான முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
ஏற்கனவே, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற நிலையில், மற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்தும், அதிமுகவுடன் மீண்டும் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் அவர் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

கல்லூரி மாணவியை மிரட்டிய இளைஞர்.. பயந்துபோய் தீக்குளித்து உயிருக்கும் போராடும் மாணவி..!

கோவா இரவு விடுதி தீ விபத்து: 25 பேர் பலி; நிர்வாகத் தோல்வியால் ஏற்பட்ட சோகம்!

என் கணவர் என்னை மோசம் செய்துவிட்டார், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.. மோடிக்கு வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான் பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments