Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

Advertiesment
Train

Siva

, ஞாயிறு, 16 பிப்ரவரி 2025 (15:52 IST)
ஓடும் ரயிலில் இருந்து பயணி ஒருவர் தவறி கீழே விழுந்த நிலையில், அவருடைய செல்போன் சிக்னலை பயன்படுத்தி ரயில்வே போலீசார் துரிதமாக அவரை கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் கோவை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் ஓடும் ரயிலில் ஸ்ரீராமன் என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவர் ரயில் படிக்கட்டில் அமர்ந்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், திடீரென ரயில் கதவு வேகமாக அடித்ததால், அவர் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதையடுத்து, அவருடைய உறவினர்கள் வழங்கிய செல்போன் எண்ணை வைத்து, அவருடைய செல்போன் சிக்னல் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த இடத்தை அடைந்த ரயில்வே போலீசார், படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக, தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஸ்ரீராமனை துரிதமாக மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர்களுக்கு பயணிகள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!