ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை விதிக்கப்படும் என்ற கூறப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க ஆயுள் முழுவதும் சிறையில் வைத்தாலும் ஆளுநரின் செயலை கண்டிப்போம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஆளுநர் ஆய்வை திமுக செயல் தலைவர் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருப்பதாக ஆளுனர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இன்று சட்டசபையில் ஆளுநர் ஆய்வு குறித்து பேச வேண்டும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால் சபாநாயகர் அதை ஏற்கவில்லை. இதனால் வெளிநடப்பு செய்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வரம்பு மீறி செயல்படுகிறார். மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநரின் செயல்பாடுகளில் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மிரட்டும் தோனியில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 7 ஆண்டுகள் அல்ல, ஆயுள் முழுவதும் சிறையில் அடைத்தாலும் ஆளுநரின் செயலை கண்டிப்போம் என்று கூறியுள்ளார்.