பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போகும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தனக்கு 40,000 கோடி சொத்து இருப்பதாக தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வரும் ஜூலை 25 ஆம் தேதி பாகிஸ்தானில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில், முஷாபர்கார் என்பவர் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்.
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும் தனது சொத்து மதிப்பை சமர்பிக்க வேண்டும். பெரும்பாலான அரசியல் வாதிகள் தங்களது சொத்து மதிப்பை வேட்பு மனுவில் குறைத்தே குறிப்பிடுவர். ஆனால் முஷாபர்கார் தனது உண்மை சொத்து நிலவரத்தை சொல்லியிருக்கிறார்.
முஷாபர்கார் வேட்பு மனுவில் தனக்கு 40 ஆயிரத்து 300 கோடி சொத்து இருப்பதாகவும். அதில் 300 ஏக்கர் நிலம், மற்றும் தோட்டங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் தேர்தலில் போட்டியிடும் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களது உண்மையான சொத்துகளை சொல்ல வேண்டும். பலர் அதனை செய்வதில்லை. அவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமாய் திகழ வேண்டும் என்பதற்காகவே நான் எனது சொத்து மதிப்பை வெளிப்படையாக கூறிவிட்டேன் என்றார்.