Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

7 ஆண்டுகள் சிறை: ஸ்டாலினுக்கு ஆளுனர் மறைமுக எச்சரிக்கையா?

Advertiesment
7 ஆண்டுகள் சிறை: ஸ்டாலினுக்கு ஆளுனர் மறைமுக எச்சரிக்கையா?
, திங்கள், 25 ஜூன் 2018 (07:39 IST)
ஆளுனரின் ஆய்வை திமுக செயல் தலைவர் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருப்பதாக ஆளுனர் அலுவலகத்தில் இருந்து வெளிவந்திருக்கும் விளக்கம், ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது.
 
ஆளுனரின் ஆய்வுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து ஆளுனர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த விளக்கத்தில் அரசியல் சாசனப்படி ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஆய்வு செய்வதற்கு ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு என்றும், தமிழக அரசின் எந்த துறையின் செயல்பாட்டையும் ஆளுநர் இதுவரை விமர்சித்ததில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
webdunia
மேலும் ஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் இருப்பதாகவும் சிக்கலான தருணங்களில் சரியான முடிவை எடுப்பதற்கும், மாதம்தோறும் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அளிக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 
7 ஆண்டு சிறை என்று ஆளுனர் பயமுறித்தியுள்ள நிலையில் ஆளுநரின் ஆய்வு தொடர்ந்தால், மாநிலத்தின் உரிமையை பாதுகாக்க, திமுக-வின் போராட்டக் கொடியும் உயரும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவுட் ஆப் தி வேர்ல்ட் அறிமுக பாடல்; வேற லெவலில் தமிழ் படம் 2.0