Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்: கலந்து கொண்டவர்கள் யார் யார்?

Webdunia
வியாழன், 13 மே 2021 (17:11 IST)
கொரனோ தடுப்பு குறித்து ஆலோசனை செய்ய முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் சற்று முன்னர் தொடங்கியது. இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் தற்போது இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி இந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் விவரங்கள் பின் வருமாறு:
 
விசிக - சிந்தனைச் செல்வன், பாலாஜி, 
காங்கிரஸ் - விஜயதரணி, முனிரத்தினம், 
மமக - ஜவாஹிருல்லா
சி.பி.ஐ - ராமச்சந்திரன், மாரிமுத்து
சி.பி.எம் - சின்னதுரை, நாகை மாலி, 
கொங்குநாடு - ஈஸ்வரன் 
த.வா.க - வேல்முருகன்
புரட்சி பாரதம் - பூவை ஜெகன் மூர்த்தி
மதிமுக - சின்னப்பா, பூமிநாதன் 
 
இந்த கூட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் தமிழக மக்களை காப்பாற்றுவது எப்படி? ஆக்சிஜன் பற்றாக்குறையை சரிசெய்வது எப்படி? உள்பட பல்வேறு விஷயங்கள் பல்வேறு ஆலோசனைகள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் செய்தியாளர்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 சுவருக்கு பெயிண்ட் அடிக்க 233 தொழிலாளர்கள்.. ரூ.1 லட்சம் செலவு.. சமூக வலைத்தளத்தில் வைரலாகும் போலி பில்கள்..!

2 வருடமாக தன்னை போலீஸ் என கூறிய போலி அதிகாரி.. பிடிபட்டது எப்படி?

மொஹரம் பண்டிகை அரசு விடுமுறை ஞாயிறா? திங்களா? தமிழக அரசு விளக்கம்..!

பிரஷாந்த் கிஷோர் தவெகவின் ஆலோசகர் பதவியிலிருந்து விலகல்: என்ன காரணம்?

காவல்துறை அதிகாரியை சரமாரியாக அடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments