Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அரசைக் காணவில்லை… அவுட்லுக் ஊடகம் வெளியிட்ட கவர் புகைப்படம்!

இந்திய அரசைக் காணவில்லை… அவுட்லுக் ஊடகம் வெளியிட்ட கவர் புகைப்படம்!
, வியாழன், 13 மே 2021 (15:17 IST)
இந்திய அரசைக் காணவில்லை என பிரபல அவுட்லுக் பத்திரிக்கை தங்கள் முதல் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது.

கொரோனா முதல் அலைக்குப் பிறகு தொற்று எண்ணிக்கைக் குறைந்த போது இந்திய பிரதமர் மோடி கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா உலகநாடுகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது எனப் பெருமையாக பேசிக்கொண்டார். ஆனால் இரண்டாவது அலை இந்தியர்களை வாட்டி வதைக்கிறது. முதல் அலையில் ஏற்பட்ட பலி மற்றும் பாதிப்புகளை விட இரண்டாம் அலையில் பாதிப்பு பல மடங்கு அதிகமாக உள்ளது.

இதற்கெல்லாம் இந்திய ஒன்றிய அரசின் நிர்வாகத் திறமையின்மையே காரணம் என ஊடகங்களும் அறிவுஜீவிகளும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இப்போது பிரபல ஊடகமான அவுட்லுக் பத்திரிக்கை தங்கள் புத்தகத்தின் முகப்பில் இந்திய அரசைக் காணவில்லை என்று புகைப்படம் வெளியிட்டுள்ளது. மேலும் அதில் ‘பெயர்: இந்திய அரசு, வயது :7 ஆண்டுகள், தெரிவிக்கவேண்டிய நபர் : இந்திய குடிமக்கள்’ எனக் கூறியுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவில் இருந்து குணமானார் பொன்னார்: பாஜகவினர் வாழ்த்து!