Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் கட்சி போஸ்டர் விவகாரம்: மன்னிப்பு கேட்ட ரசிகர்!

Webdunia
செவ்வாய், 26 நவம்பர் 2019 (19:51 IST)
அஜித் பெயரில் கட்சி பெயரிட்டு போஸ்டர் ஒன்றை வெளியிட்ட ரசிகர் வீடியோ மூலம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

மதுரையை சேர்ந்த ‘ரைட் சுரேஷ்’ என்பவர் சில நாட்களுக்கு முன்பு ’அஜித் திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற பெயரில் போஸ்டர் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அதில் அவர் மதுரை மாநகராட்சி மேயர் தேர்தலில் நிற்க போவதாகவும் மக்கள் தனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த போஸ்டர் சமீப காலங்களில் பரவலான சர்ச்சையை ஏற்படுத்தியது. அஜித் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்று தெளிவாக கூறிவிட்ட பின்பும் இதுபோல அவர் ரசிகர் ஒருவர் போஸ்டர் வெளியிட்டிருப்பது அஜித் ரசிகர்கள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தனது போஸ்டர் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளானதால் தானே அதுகுறித்த விளக்க வீடியோவை வெளியிட்டிருக்கிறார் ரைட் சுரேஷ்.

அதில் அவர் தான் அஜித் பெயருக்கு களங்கம் விளைவிக்க அப்படி செய்யவில்லை எனவும், தான் எதார்த்தமாக செய்தது இப்படி பரபரப்பை ஏற்படுத்தி விட்டதாகவும் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும் தான் கடந்த 20 வருடமாக அஜித் ரசிகராக இருப்பதாகவும் கூறி அஜித் ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments