ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

Mahendran
திங்கள், 15 செப்டம்பர் 2025 (13:57 IST)
புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  மீது தாக்குதல் நடத்தியதாக கூறி, அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. சென்னை காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த சில நாட்களாக 'ஏர்போர்ட்' மூர்த்தி, வி.சி.க. தலைவர் திருமாவளவனை விமர்சித்து வந்தார். இந்நிலையில், சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே, வி.சி.க.வினர் அவரை தாக்கியுள்ளனர். அதற்கு பதிலடியாக ஏர்போர்ட் மூர்த்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார்.
 
இந்தச் சம்பவம் குறித்து, வி.சி.க. சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் தங்கள் கட்சியினரை தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், ஏற்கனவே சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆணையர் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments