Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

Advertiesment
Flight

Prasanth Karthick

, சனி, 11 ஜனவரி 2025 (11:02 IST)

பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் பயணிக்க தொடங்கியுள்ள நிலையில் உள்நாட்டு விமான டிக்கெட்டுகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

 

 

பொங்கல் பண்டிகை 14ம் தேதி நடைபெறும் நிலையில் தொடர் விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் பேருந்து, ரயில் உள்ளிட்டவை கடும் கூட்ட நெரிசலாக காணப்படும் நிலையில், பலரும் விமானங்களில் டிக்கெட் புக் செய்து பயணிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டிமாண்ட் காரணமாக விமான டிக்கெட்டுகளும் விலை உயர்ந்துள்ளது.

 

மும்பை, டெல்லி, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இடையேயான விமான கட்டணம் 6 மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை - மதுரை இடையே விமான கட்டணம் சாதாரணமாக ரூ.3,999 ஆக இருந்து வந்த நிலையில் தற்போது ரூ17 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது.

 

சென்னை - திருச்சி விமான கட்டணம் ரூ2,199 ஆக இருந்து வந்த நிலையில் தற்போது ரூ14 ஆயிரத்தை தொட்டுள்ளது.

 

அதுபோல சென்னை - கோவை விமான கட்டணம் ரூ.3,500ல் இருந்து ரூ.16 ஆயிரமாக உயர்ந்துள்ளது

 

பேருந்து, ரயில் கூட்டத்தால் விமானத்தில் விரைவாக ஊர் சென்று விடலாம் என திட்டமிட்டவர்களுக்கு இந்த டிக்கெட் விலை உயர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?