அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுரையில் மெட்ரோ ரயில் ஓடும்: செல்லூர் ராஜூ

Mahendran
வெள்ளி, 21 நவம்பர் 2025 (16:40 IST)
அதிமுக ஆட்சியில் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். திமுக, 2026 தேர்தலுக்காக மெட்ரோ ரயில் விவகாரத்தில் நாடகமாடுகிறது" என்று குற்றம் சாட்டினார். மெட்ரோ திட்ட அறிக்கையை மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களுடன் முறையாக மத்திய அரசுக்கு அனுப்பாமல், இத்திட்டம் வரக்கூடாது என்ற நோக்குடனேயே திமுக செயல்பட்டதாகவும் அவர் சாடினார்.
 
மதுரை மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்தது அதிமுகதான் என்று குறிப்பிட்ட செல்லூர் ராஜு, "திமுக செய்யாததை அதிமுக செய்யும். எடப்பாடி பழனிசாமிதான் மதுரை மெட்ரோ ரயிலை தொடங்கி வைக்க வேண்டும் என்று மதுரை மக்களும் தெய்வங்களும் விரும்புகிறார்கள்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.
 
 மேலும், எம்ஜிஆர் காலத்திலிருந்து திமுக தொடர்ந்து இரண்டு முறை ஆட்சிக்கு வந்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் எங்க வீட்டுப்பிள்ளை.. கோத்துவிடாதீங்க!... பிரேமலதா விளக்கம்!..

18 மாதங்களாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 கப்பல் தள ஊழியர்கள் கைது.. அதிர்ச்சி தகவல்..!

ஒரே ஒரு வீட்டை தவிர எனது வருமானம் முழுவதையும் கட்சிக்கு தருவேன்: பிரசாந்த் கிஷோர்

நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்: பிரேமலதா விஜயகாந்த்..!

வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு.. இன்று 10 மாவட்டங்கள், நாளை 11 மாவட்டங்களில் கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments