Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெற்றோர், தம்பியைக் கொன்ற ’அதிமுக பிரமுகர்’ ! திடுக்கிடும் தகவல்

பெற்றோர், தம்பியைக் கொன்ற ’அதிமுக பிரமுகர்’ ! திடுக்கிடும் தகவல்
, ஞாயிறு, 19 மே 2019 (11:38 IST)
திண்டிவனம் காவேரிப்பாக்கம் சுப்பராயன் தெருவில் வசிப்பவர் அதிமுக பிரமுகர்  ராஜி (60) கடந்த 15 ஆம் தேதி இவரது வீட்டில் ஏசி வெடித்து தீப்பிடித்து எரிந்ததில் ராஜி, அவரது மனைவி கலைச்செல்வி(51), இளையமகன் கவுதமன் ஆகியோர் பரிதாபமாக இறந்ததாக செய்திகள் வெளியானது. 
பின்னர் இவர்களது உடல்களை மீட்ட போலீஸார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மருத்துவ அறிக்கையில் ராஜியின் கழுத்தில் வெட்டுக்காயம் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து இது விபத்து அல்ல கொலை என்று போலீஸார் முடிவுசெய்தனர்.
 
மேலும் ராஜின் மூத்த மகன் கோவர்தன்  மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. இதனையடுத்து போலீஸார் கோவர்தன்  (30 ) மற்றும் அவரது மனைவி ஆகியோரிடம் விசாரணை விசாரணை நடத்தினர்.இதில் முன்னுக்குப் பின் முரணான தகவல் கிடைத்ததால் தீவிர விசாரணை நடத்தினர்.
 
அப்போது பெற்றோர் மற்றும் சகோதரனை தீவைத்துக் கொன்றதாகத் தெரிவித்தார்.
 
இதுகுறித்து அவர் போலிஸாரிடம் கூறியதாவது :
 
சிறுவயதில் இருந்தே என் பெற்றோர் தம்பி  கவுதம்  மீதே அதிகம் பாசம் வைத்திருந்தனர். அவனுக்கு பிரமாண்டமாகத் திருமணம் செய்யவும் திட்டமிட்டனர் . இதனால்நான் ஆத்திரம் கொண்டேன். சொத்துக்களையும் தம்பிக்கே எழுதிவைக்க முடிவு செய்தததால் பெற்றோர்க்கு என்மீது பாசம் இல்லை என எண்ணினேன். அதனால் கடந்த 14 ஆம்தேதி இரவு பெற்றோர் , தம்பி ஒரே அறையில் தூங்கியதால் பெட்ரோலை நிரப்பி துணியால் திரி செய்து வைத்திருந்தேன்.பின்னர் பெட்ரோல் ஊற்றிவைத்திருந்த பீர்பாட்டிலில் தீ பற்றவைத்து அறையில் வீசினேன்.அவர்கள் வெளியில் ஒடிவராமல் இருக்க வெளியில் கதவை தாழிட்டேன். ஆனால் அப்பா ராஜி மட்டும் தீக்காயக்களுடன் பின் பக்க கதவு வழியாக  தப்பித்துவந்தார். காப்பாற்றுங்கள் என்று கத்தினார். இதில் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் கத்தியை எடுத்து தந்தையை சரமாரியாக வெட்டினேன். பின்னர் ஏசி வெடித்ததாக நாடகம் ஆடினேன். இவ்வாறு தெரிவித்தார்.
 
இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்த கோவர்தன் மனைவி தீபா காயத்திரியிடமும் விசாரணை நடத்தினர் . அவரும் இக்கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
 
இதனையடுத்து இருவரையும் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
 
சொத்துக்காக பெற்றோரையும், தம்பியையும் கொன்ற சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தண்டவாளத்தில் பைக்கை நிறுத்தி ரயிலை மறித்த வாலிபர் !