எங்களுடன் வாங்க.. தவெகவுக்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி..

Siva
செவ்வாய், 22 ஜூலை 2025 (07:53 IST)
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளதாக வந்திருக்கும் செய்தி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
"ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் வரலாம்" என்ற தனது கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பொருந்தும் என்று எடப்பாடி பழனிச்சாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், தமிழக வெற்றி கழகத்துடன் இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
 
இது, அதிமுக - பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைய வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி முதன்முறையாக விடுத்த நேரடியான அழைப்பாகும். திமுகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் தீவிர முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டுள்ள நிலையில், ஏற்கனவே அவர் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அவர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த அழைப்பை விஜய் ஏற்று அதிமுக கூட்டணியில் இணைவாரா அல்லது பாஜகவை கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நிபந்தனையை விதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments