Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

Advertiesment
அதிமுக

Mahendran

, செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (10:21 IST)
நேற்று அந்த தியாகி யார் என்ற பேட்ஜ் அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்த நிலையில், இன்று கருப்பு சட்டை அணிந்து அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபைக்கு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த தியாகி யார் என்ற வாசகம் அடங்கிய பேட்ஜை நேற்று அணிந்த அதிமுக உறுப்பினர்கள், அவையில் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், இன்று சட்டசபை தொடங்கிய போது அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் கருப்பு சட்டை அணிந்து வருகை தந்துள்ளனர்.
 
சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்களுக்கு பேச அனுமதி மறுக்கப்படுவதாக குற்றம் சாட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளதாக அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர்.
 
இன்றும் சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபடுவார்களா? சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு அதிரடி நடவடிக்கை எடுத்து, இன்றும் அதிமுக எம்எல்ஏக்களை வெளியேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
ஆனால், நேற்று போலவே இன்றும் அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் மட்டும் இயல்பாக வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!