Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மக்களை ஏமாற்றவே நீட் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம்: ஈபிஎஸ் குற்றச்சாட்டு..!

Advertiesment
Stalin Edappadi

Siva

, வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (14:43 IST)
ஏப்ரல் 9ஆம் தேதி நீட் தேர்வு குறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்த நிலையில், இளைஞர்களையும் மக்களையும் ஏமாற்றுவதற்கு திமுக அரசு நடத்தும் நாடகமே இந்த நீட் தேர்வுக்கான அனைத்து கட்சி கூட்டம் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. உண்மை நிலையை சட்டமன்றத்தில் பேசினால் வெளிச்சம் காணும் அல்லவா? மக்கள் பிரச்சினைகளில் இந்த அரசு எந்தவித அக்கறையும் இல்லாமல் இருப்பதால், நாங்கள் குரல் எழுப்பி வருகிறோம்.
 
தேர்தலின் போது அளித்த ஒரு வாக்குறுதியை கூட திமுக நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக வாக்குறுதி அளித்துத்தான் ஆட்சிக்கு வந்தது. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தன்னிடம் இருப்பதாக உதயநிதி கூறினார். ஆனால், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாக்காக பேசிய முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை மட்டுமே கூட்டியுள்ளார்.
 
நீட் தேர்வு விவகார வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாக கூறிவிட்டு, இப்போது கூட்டம் ஏன்? மக்களை ஏமாற்றுவதற்காகவே அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்படுகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், ஆட்சிக்கு வந்த பிறகும் திமுக இரட்டை வேடம் போடுகிறது," என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 GB RAM, 128 GB Memory.. வெறும் ரூ.7500க்கு..! POCO C71 சிறப்பம்சங்கள்!