2029-ஆம் ஆண்டிலும் நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக இருப்பார் என உறுதியாக நம்புகிறேன் என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில் சிவசேனா (உத்தவ் தாக்ரே அணி) மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சனம் செய்துள்ளார். “மோடி வயதாகி வரும் நிலையில், அரசியலில் இருந்து ஓய்வெடுக்க திட்டமிட்டிருப்பதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகம் சென்றிருக்கிறார்” என்று அவர் கூறியுள்ளார்.
அவருக்கு பதிலளித்துள்ள மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னவீஸ், “2029-ஆம் ஆண்டிலும் நரேந்திர மோடியே பிரதமராக தொடர்வதை நாம் காண்போம். அவருக்குப் பிறகு யார்? என்ற கேள்வியே எழுவதில்லை. மோடி எங்கள் தலைவர்; அவரே தொடர்ந்து வழிநடத்துவார்” என்று வலியுறுத்தினார்.
மேலும், “நமது பாரம்பரியத்தில், தந்தை உயிருடன் இருக்கும்போது அவருக்குப் பிறகு யார் என்பதைப் பற்றி பேசுவது ஒப்புக்கொள்ள முடியாதது. இப்படிப் பேசுவது முகலாய கலாசாரத்திற்கே உரியது” என்றும் அவர் கூறினார்.