Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக , தேமுதிக மாபெரும் வெற்றிக் கூட்டணி-பிரேமலதா விஜயகாந்த்

premalatha vijayakanth

Sinoj

, புதன், 20 மார்ச் 2024 (20:11 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  அறிவித்தார். அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில்,தமிழ் நாட்டில் அதிமுக கூட்டணி கட்சிகலுடன் தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்த நடத்தி வந்த நிலையில் தேமுதிகவுடன் இழுபறி நீடித்தது.
 
இன்று தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
 
இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:
 
''மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்.  மற்றும் ஜெயலலிதா வாழ்ந்து புரட்சி செய்த அதிமுக அலுவலகத்திற்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
 
2011 ஆம் ஆண்டு அதிமுக , தேமுதிக இடைய உருவான மாபெரும் வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது.
 
வரும் மக்களவை தேர்தலிலும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்தக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அதிமுக தலைமையிலான மாபெரும் கூட்டணி பல போட்டிகள், சவால்களை கடந்து வெற்றி பெறும்''என்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறுவை சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வருகிறேன்..! – சத்குரு பேசி வெளியிட்ட வீடியோ!