Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

Advertiesment
டெல்லியில் அமித்ஷா - ஈபிஎஸ் சந்திப்பு.. உறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி..!

Siva

, புதன், 26 மார்ச் 2025 (07:32 IST)
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திடீரென டெல்லி சென்றிருந்தார். நேற்று இரவு, அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த சந்திப்பை அடுத்து, அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த சந்திப்பின்போது, எடப்பாடி பழனிச்சாமியுடன் வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களும் இருந்தனர். கூட்டணி குறித்து இரு தரப்பினரும் விரிவாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது.
 
சந்திப்புக்குப் பிறகு, அமித்ஷா தனது சமூக வலைதளத்தில், "2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமையும். அதன் பின்னர் மதுவெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வரும்" என தெரிவித்தார். இதனை அடுத்து, மீண்டும் அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
திமுகவுக்கு எதிராக ஒரு வலுவான கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்து, இதன் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. சிறுபான்மையர் வாக்குகள் இந்த கூட்டணிக்கு வராது என்றாலும், திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒட்டுமொத்தமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும், இந்த கூட்டணியில் விஜய் சேருவாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்!
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உளவுத்துறை பெண் அதிகாரி மர்ம மரணம்.. தண்டவாளத்தில் இருந்த பிணம்..!