கேரளாவில் மத்திய உளவுத்துறையை சேர்ந்த இளம்பெண் அதிகாரி ரெயில் தண்டவாளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை, திருவனந்தபுரம் பெட்டா ரெயில் நிலையத்துக்கு அருகில், 24 வயதான உளவுத்துறை அதிகாரி மேகா இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
பெட்டா காவல்துறையினர் வழங்கிய தகவலின்படி, பத்தனம்திட்டா மாவட்டம் கூடல் பகுதியை சேர்ந்த மேகா, பெட்டா பகுதியில் ஒரு விடுதியில் வசித்து வந்ததாக தெரிகிறது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது.
ஒரு பெண் ரெயில் தண்டவாளத்தில் குதித்ததை ரெயில் லோகோ பைலட் கண்டு, காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால், மேகாவின் மரணத்திற்கு காரணமான சூழ்நிலைகள் குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை.
மேகாவின் பெற்றோர், அவரின் மரணம் தொடர்பாக சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்தநிலையில், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் குடும்பத்தினருக்கு ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, பெட்டா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மேலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.