கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக கிஷோர் கே ஸ்வாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்கள் முன்னதாக கோவையில் கார் வெடித்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். இந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் இது தொடர்பான ஆவணங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்தார்.
அதன் அடிப்படையில் விசாரணையில் இறங்கியுள்ள தேசிய புலனாய்வு அமைப்பு கார் வெடித்த சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் பத்திரிக்கையாளரான கிஷோர் கே ஸ்வாமி கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பொது அமைதியை குலைக்கும் விதமாக பதிவிட்டதாக சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே கிஷோர் கே ஸ்வாமி மீது வேறு சில வழக்குகளும் நடந்து வரும் நிலையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.