Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை தொடங்கும் அக்னி நட்சத்திரம் - 25 நாட்கள் வாட்டி வதைக்கும்

Advertiesment
Agni natchathiram
, வியாழன், 3 மே 2018 (12:23 IST)
தமிழகத்தில் தற்போது வெயில் அக்னி நட்சத்திரத்தையே மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது. பல மாவட்டங்களில் தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகிறது. இந்நிலையில் வரும் 4-ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.

 
பருவமழை பொய்த்து போனது, கடுமையான வெயிலின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். நீர் நிலைகளும் வரண்டு போய் உள்ளது. 
 
இந்நிலையில் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரும் 4-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த 25 நாட்களும் வெயில் வாட்டி வதைக்கும், அனல் காற்று வீசும் என வானிலை மையம் கூறியுள்ளது. 
 
ஏற்கனவே, தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்துகொண்டிருக்கும் வேளையில், நாளை தொடங்கவுள்ள அக்னி நட்சத்திரத்தால் வெயிலின் கொடுமை எப்படி இருக்குமோ என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டைனோசர்கள் இன்னும் உயிர் வாழ்கிறதா?