Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக - பாஜக இரட்டைக்குழல் துப்பாக்கி : கூட்டணியை உறுதிபடுத்திய நமது அம்மா

Advertiesment
அதிமுக - பாஜக இரட்டைக்குழல் துப்பாக்கி : கூட்டணியை உறுதிபடுத்திய நமது அம்மா
, திங்கள், 23 ஏப்ரல் 2018 (13:35 IST)
அதிமுகவும், பாஜகவும் இணைந்தே செயல்படுகிறது என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா செய்தி வெளியிட்டுள்ளது.

 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின், அதிமுக பாஜகாவின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகவும், ஆட்சியை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக அதை எதிர்க்க முடியாமல் அதிமுக அரசு செயல்படுகிறது எனவும் பொதுவான கருத்து நிலவுகிறது.
 
இந்நிலையில், அதை மெய்ப்பிக்கும் வகையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா பத்திரிக்கையில் இன்று ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
webdunia

 
அதில் “எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அதிமுக. - பாஜக உறவை யாராலும் பிரிக்க முடியாது. மத்திய - மாநில அரசுகளின் ஒற்றுமையை எவராலும் சீர் குலைக்க முடியாது என்றும் இந்த உறவைக் கெடுக்க நினைக்கும் திமுகவின் திட்டம் பலிக்காது.
 
இந்திய அரசியலில் அதிமுகவும், பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது. பயணத்திட்டத்தை இரு கட்சிகளின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயமாக இருக்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இதன் மூலம் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுககவும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்பது உறுதியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“குழந்தைகள் மீதான அத்துமீறலை தடுக்க சட்ட நடைமுறையும், விழிப்புணர்வும் அவசியம்”