Publish Date: Sat, 21 Apr 2018 (17:08 IST)
Updated Date: Sat, 21 Apr 2018 (17:11 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலில் குதிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் எந்த நேரத்திலும் அவர் தனது புதிய அரசியல் பெயரை அறிவிக்கும் நிலை ஏறபட்டுள்ளது.
இந்த நேரத்தில் ஒருபுறம் ரஜினியின் அரசியல் பாதைக்கு எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு புறம் அதிமுக, திமுகவில் உள்ள பிரபலங்கள் ரஜினியின் கட்சிக்கு படையெடுக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜெயலதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் அதிருப்தியில் இருப்பவர்களும், ஸ்டாலின் தலைமையை விரும்பாத திமுக பிரமுகர்களும் ரஜினியின் கட்சியில் சேர தூது விட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திரையுலகின் முக்கிய நடிகர், நடிகைகளும் ரஜினிக்கு ஆதரவு தரவுள்ளதாகவும் தெரிகிறது.
'காலா' படத்தின் ரிலீசுக்கு பின்னர் ரஜினி தனது கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அவரது கட்சியில் யார் யார் இணைவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்