Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தலை கண்டு அதிமுக பின்வாங்குகிறதா? வேட்பாளரை அறிவிக்காமல் இழுபறி

தேர்தலை கண்டு அதிமுக பின்வாங்குகிறதா? வேட்பாளரை அறிவிக்காமல் இழுபறி
, சனி, 5 ஜனவரி 2019 (18:31 IST)
திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக, அமமுக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நேற்று அறிவித்தது.  
 
ஆம், அமமுக எஸ்.காமராஜ், திமுக சார்பில் பூண்டி கலைவாணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் போட்டியாக பலமான ஒருவரை அதிமுக களமிறக்க வேண்டும். 
 
நேற்று இது குறித்தி முடிவெடுக்க அதிமுக ஆட்சிக்குழு கூடுவதாய் அறிவிக்கப்பட்டு பின்னர் இன்று வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என கூறப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் அதிமுக ஆட்சிக்குழுவும் கூடியது. 
 
இதன் பின்னர், அதிமுக சார்பில் திருவாரூர் வேட்பாளராக யார் போட்டியிடுவார் என ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்படும் என துனை முதலவர் பன்னீர் செல்வம் அறிவித்தார். 
 
அதன் பின்னர், எத்தனை தேர்தல் வந்தாலும் அவற்றை சந்திக்க அதிமுக அச்சப்படாது. தேர்தலை கண்டு அதிமுக என்றைக்குமே பின்வாங்காது. அதிமுகவின் திருவாரூர் தேர்தலின் வெற்றி நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய சரித்திரத்தை ஏற்படுத்தும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். 
 
இதனிடையே திருவாரூரில் புயல் நிவாரணப் பணிகள் நடைபெறுவதால் தேர்தலை ஒத்திவைக்க அனைத்துக்கட்சி கோரியது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசு பள்ளிகளில் ஸ்போக்கன் இங்லீஸ் பயிற்சி கோரி வழக்கு : உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு