Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமாவாசையில் களமிறங்கும் பன்னீர்செல்வம்? திமுகவை எதிர்த்து பெளர்ணமியாய் ஜொலிப்பாரா...?

Advertiesment
அமாவாசையில் களமிறங்கும் பன்னீர்செல்வம்? திமுகவை எதிர்த்து பெளர்ணமியாய் ஜொலிப்பாரா...?
, சனி, 5 ஜனவரி 2019 (12:09 IST)
திருவாரூர் தொகுதிக்கு வரும் ஜனவரி 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக, அமமுக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை நேற்று அறிவித்தது. 
 
ஆம், அமமுக எஸ்.காமராஜ், திமுக சார்பில் பூண்டி கலைவாணன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் போட்டியாக பலமான ஒருவரை அதிமுக களமிறக்க வேண்டும். 
 
அப்படி பார்க்கையில் பன்னீர்செல்வத்தின் பெயரும், மலர்விழியின் பெயரும் லிஸ்டில் இருந்தது. ஆனால், மலர்விழியை வேட்பாளராக அறிவித்தால் அந்த அளவிற்கு வெற்றி வாய்ப்புகள் இருக்காது என கூறப்படுகிறது. 
 
எனவே, பன்னீர்செல்வத்தை களமிறக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று இது குறித்தி முடிவெடுக்க அதிமுக ஆட்சிக்குழு கூடுவதாய் அறிவிக்கப்பட்டு பின்னர் இன்று அமாவாசை தினத்தில் வேட்பாளரை அறிவிக்கும் என தெரிகிறது. 
 
பன்னீர் செல்வம் பன்னீர்செல்வம் என்றவுடன் துணை முதல்வர் பன்னீர்செல்வம் என நினைக்க வேண்டாம் ஏற்கனவே கலைஞரை திருவாரூரில் எதிர்த்து போட்டியிட்ட பன்னீர்செல்வம் இவரு. 
 
எனவே, தொகுதியில அறிமுகம் ஆன அனுபவம் மிக்க பன்னீர்செல்வத்தையே வேட்பாளரா நிறுத்த அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவரும் இடைத்தேர்தலில் நிற்க விருப்பமனு அளித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழிதீர்க்கும் படலத்தில் கேரள மக்கள்: எம்.எல்.ஏ வீட்டில் வெடிகுண்டு வீச்சு