திருவாரூரில் இப்போது இடைத்தேர்தல் நடத்தலாமா என மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்து கருத்து கேட்பு கூட்டத்தில் தேர்தல் வேண்டாம் என திமுக, அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகல் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் உள்பட 20 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் திருவாரூர் தொகுதியின் இடைத்தேர்தல் ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி நேற்று திமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் தங்கள்து வேட்பாளர்களை அறிவித்தனர். இன்று அதிமுக தனது வேட்பாளரை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், கஜா புயல் காரணமாக திருவாரூர் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாலும், மக்களுக்கு நிவாரண பணிகள் முழுமையாக சென்று சேராத காரணத்தாலும் இடைத்தேர்தலை ஒத்திவைக்கும் படி கோரிக்கைகள் எழுந்தன.
அதன்படி சற்றுமுன் திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் இடைத்தேர்தலை கஜா புயல் நிவாரணப் பணிகள் நிறைவடைந்த பிறகு நடத்தலாம் என அதிமுக, திமுக, சிபிஎம் வலியுறுத்தினர்.
இந்நிலையில் இதுகுறித்த விரிவான அறிக்கையை மாலை சமர்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணைவம் தெரிவித்துள்ளது. எனவே, மாலை அறிக்கை வெளியானதும்தான் தேர்தல் நடக்குமா? நடக்காதா? என்ற பதில் கிடைக்கும்.