Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதிமுக எம்பியின் ராஜினாமா கடிதம் ஏற்க மறுப்பு!

அதிமுக எம்பியின் ராஜினாமா கடிதம் ஏற்க மறுப்பு!
, திங்கள், 2 ஏப்ரல் 2018 (12:38 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்த அதிமுக எம்.பி. முத்துகருப்பனின் ராஜினாமா கடிதம் ஏற்க மறுக்கப்பட்டுள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.க்கள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கடந்த வாரம் எம்.பி. நவநீதகிருஷ்ணன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில் அதிமுக எம்.பி.க்கள் தீக்குளிப்போம் என்று கூறினார். அதிமுக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எதிர்க்கட்சி உள்ளிட்ட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் அதிமுக எம்.பி. முத்துகருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்து ராஜினாமா கடிதம் கொடுக்க முடிவு செய்தார். ஆனால் அவரது கடிதத்தை வெங்கையா நாயுடு ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளார்.   
 
இதுபோன்ற கடிதத்தை ஏற்க முடியாது என்றும் ராஜினாமா செய்ய வேண்டாம் என்றும் வெங்கையா நாயுடு அறிவுரை வழங்கியுள்ளார். 
 
மேலும் உடல்நலம் சரியில்லை மற்றும் சொந்த காரணம் உள்ளிட்ட காரணங்களை குறிப்பிட்ட ராஜினாமா கடிதத்தை ஏற்கும் வாய்ப்புள்ளது. ஆனால், அரசியல் காரணங்களை குறிப்பிட்டு அளிக்கப்படும் ராஜினாமா கடிதம் பொதுவாக ராஜ்யசபாவில் ஏற்கப்படுவதில்லை. இதனால் முத்துகருப்பனின் ராஜினாமா கடிதத்தை ஏற்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல செய்தி தொகுப்பாளினி 5 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை