காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் இதற்கு மேல் கால அவகாசம் அளிக்க முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட நிலையிலும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களில் அமைக்கவில்லை
இதனால் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை கடந்த வெள்ளியன்று தமிழக அரசு தாக்கல் செய்தது. இந்த மனு தற்போது விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஏப்ரல் 7ஆம் தேதி இந்த மனுவை விசாரணை செய்யவிருப்பதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு அறிவித்துள்ளது.
மேலும் காவிரி வழக்கின் தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மேலாண்மை வாரியம் குறித்து குறிப்பிடவில்லை என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு காவிரி விவகாரம் ஒரு பெரிய பிரச்சினை தான் என்றும் தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிபதியின் இந்த கருத்தால் தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.