Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல செய்தி தொகுப்பாளினி 5 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

Advertiesment
ஐதராபாத்
, திங்கள், 2 ஏப்ரல் 2018 (12:17 IST)
ஐதராபாத்தில் பிரபல செய்தி தொகுப்பாளினி 5 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சேனல் ஒன்றில் செய்தி தொகுப்பாளினியாக பணியாற்றியவர் ராதிகா. இவர் தனது கணவரை ஆறு மாதத்திற்கு முன்பு விவாகரத்து செய்தார். இவருக்கு மனநலம் பாதித்த ஒரு மகன் உள்ளார்.
 
இந்நிலையில் பணியில் இருந்து வீடு திரும்பிய ராதிகா, வீட்டில் தனது ஹேண்ட் பேக்கை வைத்து விட்டு, வேகமாக 5 வது மாடிக்கு சென்று மேலிருந்து குதித்துள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ராதிகாவை மீட்டு மருத்துவமனையில் மீட்டனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து ராதிகாவின் வீட்டிற்கு சென்ற போலீஸார், ராதிகாவின் ஹேண்பேக்கிலிருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்கிறேன், வேறு யாரும் காரணமில்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ராதிகாவின் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈரானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: மக்கள் அச்சம்