Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை தலைமை வேணாம்.. சசிக்கலா வேணும்! – அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி

Webdunia
வியாழன், 3 மார்ச் 2022 (11:06 IST)
அதிமுகவிற்கு சசிக்கலா தலைமை தாங்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பதவி வகித்து வரும் நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிக்கலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என சிலர் அவ்வபோது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் குறைந்ததில் அமமுக கட்சிக்கும் பங்குண்டு என பேசிக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் கட்சிக்கு இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வி கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் தேனி அதிமுக கூட்டத்தில் ஓபிஎஸ் கலந்து கொண்டபோது பலரும் சசிக்கலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, அதிமுகவிற்கு இரட்டை தலைமை தேவையில்லை. ஒற்றை தலைமைதான் தேவை. சசிக்கலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க வேண்டும் என பேசியுள்ளார். இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கம் விலை இன்று மீண்டும் குறைவு.. ஒரு சவரன் ரூ.72,000க்கும் குறையுமா?

தனியார் மருத்துவாம்னையில் மருத்துவ மாணவியின் பிணம்.. கோவையில் பரபரப்பு..!

வனபத்ரகாளியை வேண்டி அதிமுக எழுச்சிப் பயணத்தை தொடங்கிய எடப்பாடியார்!

சென்னைக்கு மிக அருகில்.. ஏமாற்று விளம்பரம் செய்தால் நடவடிக்கை..TNRERA எச்சரிக்கை..!

ஏழை மாணவர்கள் தங்குவதற்காக இனி ‘சமூகநீதி விடுதிகள்’ - முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments