Publish Date: Tue, 31 Aug 2021 (11:17 IST)
Updated Date: Tue, 31 Aug 2021 (11:18 IST)
ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா பல்கலைகழகத்தை அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக இது தொடர்பான விவாதத்தில் திமுக ஜெயலலிதா பல்கலைகழகத்தை உள்நோக்கத்துடன் அண்ணாமலை பல்கலைகழகத்துடன் இணைப்பதாக கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளது.