Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மதியம் வரைதான் க்ளாஸ்; விளையாட்டு நேரம் கிடையாது! – அமைச்சர் அன்பில் மகேஷ் கறார்!

Advertiesment
Tamilnadu
நாளை முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விதிமுறைகள் குறித்து பேசியுள்ளார்.

கொரோனா காரணமாக திறக்கப்படாமல் இருந்த தமிழக பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. முதலாவதாக 9 முதல் 12 வகுப்பு வரையிலுமான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் விதிமுறைகள் குறித்து தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, மாணவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். வகுப்பறைகளில் கிருமி நாசினி வைக்கப்பட வேண்டும்.

ஒரு நாளில் 5 வகுப்பு நேரங்கள் செயல்படும். விளையாட்டு வகுப்பு கிடையாது.

காலை 9.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை பள்ளிகள் செயல்படும். வாரம் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும்

வகுப்பறைகளில் ஒரு பெஞ்சிற்கு இரு மாணவர்கள் இரு முனைகளில் வீதம் அமரவைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென 30 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!