Publish Date: Fri, 18 Feb 2022 (13:48 IST)
Updated Date: Fri, 18 Feb 2022 (13:59 IST)
நாளை தேர்தல்: இன்று திமுகவுக்கு தாவிய அதிமுக வேட்பாளர்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் இன்று அதிமுக வேட்பாளர் ஒருவர் திமுகவுக்கு தாவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ளது என்பதும் இந்த தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி 9வது வார்டு அதிமுக வேட்பாளர் பழனிவேல் என்பவர் இன்று திடீரென்று திமுக எம்எல்ஏ வெங்கடாசலம் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்
நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் அதிமுக வேட்பாளர் திடீரென திமுகவில் இணைந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அதிமுக வேட்பாளர் பழனிவேல் ஆதரவாளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர்.