தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் திமுகவிலிருந்து மேலும் 45 நிர்வாகிகள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் நேற்றுடன் பிரச்சார பணிகள் முடிவடைந்துள்ளன. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளில் பலர் வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த நிலையில் சிலர் தேர்ந்தெடுக்கப்படாததால் பல பகுதிகளில் சுயேட்சையாகவும் சொந்த கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் அவ்வாறு கட்சியில் இருந்து கொண்டே சுயேட்சையாக போட்டியிட்ட 15 பேரை முன்னதாக திமுக கட்சியிலிருந்து நீக்கி அறிவிப்பை வெளியிட்டது. தொடர்ந்து இன்று கட்சிக்கு விரோதமான காரியங்களில் ஈடுபட்டதாக 45 நிர்வாகிகளை தற்காலிக நீக்கம் செய்து திமுக பொது செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். இதுவரை 140க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.