Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நீங்க போங்க.. நாங்க வரல... தேமுதிகவிடம் முரண்டு பிடிக்கும் அதிமுக

Advertiesment
அதிமுக
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் அதிமுக தனது கூட்டணி குறித்த அறிவிப்புகளை இன்று அதிரடியாக வெளியிட்டு வருகிறது. அதிமுக - பாஜக - பாமக - தேமுதிக கூட்டணியாக தேர்தலை சந்திக்கும் என தெரிகிறது. 
 
ஏற்கனவே, பாமகவிற்கு 7 தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும் என பிரித்து கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து தேமுதிகவிற்கு எத்தனை தொகுதி வழங்கப்படும் என தெரியவில்லை. 
 
இந்நிலையில், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தற்போது விஜய்காந்த் வீட்டிற்கு சென்றுள்ளார். விஜய்காந்த் - பியூஸ் கோயல் சந்திப்பில் தொகுதி பங்கீடு பற்றி பேச வாய்ப்பில்லை ஏனெனில் அதிமுக தரப்பில் யாரும் இந்த சந்திப்பிற்கு செல்லவில்லை. 
 
எனவே, இன்று தேமுதிக - அதிமுக தொகுதி பங்கீடு இன்று வெளியாகாது என தெரிகிறது. மேலும், கோயல் விஜய்காந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தாகவும், விஜய்காந்தின் உடல் நிலை சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறி வருவதாவும் தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடேங்கப்பா... ரெட்மி முதல் ஐபோன் வரை: ப்ளிப்கார்ட் ஸ்மார்ட்போன் பொனான்சா!!!