அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் 7. 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது அதிமுக அரசு.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக-காங்கிரஸ்-விசிக-மதிமுக-இடது சாரிகள் அடங்கியப் பலமானக் கூட்டணி உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பாகவே இந்தக் கூட்டணி அறிவிக்கப்பட்டாலும் இன்னும் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட் என்ற விவரம் இன்று வரையில் வெளியாகவில்லை.
ஆனால் அதிமுக கூட்டணியில் பாஜக-பாமக-தேமுதிக ஆகியக் கட்சிகள் இணைவது நேற்று வரையில் வெறும் யூகங்களாகவே இருந்தது. ஆனால் இன்று காலை பாமக வோடு கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது பாமக. அந்தக் கட்சிக்கு மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாகவும் மாநிலங்களவைத் தேர்தலில் 1 தொகுதியும் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தது.
அதையடுத்து மதியம் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையிலான பாஜக குழு இப்போது அதிமுகவோடு கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பாஜக அதிமுகவிடம் 5 தொகுதிகளைக் பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 39 தொகுதிகளில் இந்த இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே 12 தொகுதிகளை ஒதுக்கி அதிர்ச்சி அளித்துள்ளது அதிமுக. இத்தனைக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் போட்டியிட்டு அதில் 38 தொகுதிகளில் வென்றது அதிமுக. இன்னமும் அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இணையவுள்ளன. அவர்களுக்கும் தொகுதிகளைப் பிரித்துக்கொடுத்த பின் அதிமுக எத்தனைத் தொகுதிகளில் பங்கேற்கும் என்ற விவரம் தெரியவில்லை.